கிச்சடியில் உப்பு அதிகம்: ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவர்

நேற்று இதே தானே பகுதியில் தேநீருடன் காலை உணவு வழங்காததால் மாமனார் மருமகளை சுட்டுகொன்ற சம்பவ நடைபெற்ற நிலையில், இன்று அதேபோன்ற காரணத்திற்காக மற்றொரு கொலை நடந்துள்ளது.
கிச்சடி
கிச்சடி
Published on

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், பயந்தார் பகுதியில் நிலேஷ் காங் என்ற 46 வயது நபர் ஒருவர் தனது மனைவி நிர்மலாவை கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நிலேஷ்ஷிற்கு அவரது மனைவி நிர்மலா காலை 9.30 மணி அளவில் காலை உணவாக கிச்சடி பரிமாறியுள்ளார். அந்த உணவில் உப்பு அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிலேஷ் மனைவியிடம் சண்டையிட்டு, துணி ஒன்றை எடுத்து அவரது கழுத்தை நெரித்துள்ளார். வீட்டில் நடந்த சண்டையை பார்த்து அக்கம்பக்கத்தினர் போலீசிற்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்தபோது நிர்மலா ஏற்கனவே கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து நிலேஷ்ஷை கைது செய்துள்ள போலீசார்  ஐபிசி பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று தானே பகுதியில் தேநீருடன் காலை உணவு வழங்காததால் மாமனார் மருமகளை சுட்டுகொன்ற சம்பவ நடைபெற்ற நிலையில், இன்று அதேபோன்ற காரணத்திற்காக மற்றொரு கொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com