கட்சி மாற மாட்டேன்- முன்னாள் மந்திரி ரோஜா

சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்.கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க முடியாது.
கட்சி மாற மாட்டேன்- முன்னாள் மந்திரி ரோஜா
Published on

திருப்பதி:

திருப்பதி கோவிலில் ஆந்திரா முன்னாள் மந்திரி ரோஜா நடிகை ரவளியுடன் வந்து தரிசனம் செய்தார்.

நான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப் போவதாக சிலர் சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்.

நான் எந்த காரணத்தைக் கொண்டும் கட்சி மாற மாட்டேன். சிலர் கட்சியில் இருந்து வெளியேறுவதால் ஜெகனுக்கோ, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கோ எந்த இழப்பும் இல்லை.

கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க முடியாது. அவர்களது நிலைமையை தற்போது பார்த்து வருகிறோம். ஆந்திராவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா, பெண்கள் மீதான தாக்குதல், ராக்கிங் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com