தெலுங்கானாவில் மனைவியை ஓட ஓட வெட்டிக் கொன்ற ஆட்டோ டிரைவர்- மகன் கெஞ்சியும் விடவில்லை

அவினாஷிற்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
தெலுங்கானாவில் மனைவியை ஓட ஓட வெட்டிக் கொன்ற ஆட்டோ டிரைவர்- மகன் கெஞ்சியும் விடவில்லை
Published on

தெலுங்கானா மாநிலம் அட்டப்பூர் அடுத்த தேஜஸ்வினி நகரை சேர்ந்தவர் அவினாஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோமளி (வயது31). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அவினாஷ் ஆட்டோ ஓட்டி வந்தார். கோமளி தேஜஸ்வினி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகவும், பல வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்தார்.

இதனால் அவினாஷிற்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு அவினாஷ் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரவு முதல் காலை வரை தகராறு நடந்தது.

இதில் ஆத்திரமடைந்த அவினாஷ் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியை தாக்கினார். இதனைக் கண்ட அவரது மூத்த மகன் தாயை கொலை செய்ய வேண்டாம் என காலை பிடித்து கெஞ்சினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கோமளி கணவரின் பிடியிலிருந்து நழுவி வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆத்திரம் அடங்காத அவினாஷ் மனைவியை விரட்டி, விரட்டி வெட்டினார். கோமளியின் அலறல் சத்தம் கேட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர்.

இதனைக் கண்ட அவினாஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். அங்கிருந்தவர்கள் கோமளியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே கோமளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவினாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com