

கடந்த புதன்கிழமை ஜூன் 3ம் தேதி மக்கள் மாளிகையில் கர்நாடகாவின் 25வது முதலமைச்சராகப் டி.கே.சிவகுமார் பதவியேற்றார். டி.கே.சிவகுமாருடன் சேர்த்து, 13 அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில், ஒரு பெண் அமைச்சர்கள் கூட இடம்பெறவில்லை.
கர்நாடக அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர்கூட இடம்பெறாதது குறித்து எதிர்க்கட்சிகளும் அரசியல் வட்டாரங்களும் விமர்சனம் எழுப்பிய நிலையில், முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அமைச்சரவையில் இன்னும் பல காலியிடங்கள் உள்ளன. இது ஒரே ஒரு நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த விஷயம் அல்ல. அடுத்த கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கண்டிப்பாக வழங்கப்படும். என கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 2026 ஜூன் 18 அன்று நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 8-ம் தேதி வரை நடைபெற்று, ஜூன் 18-ல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. "இதன் மூலம், மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.