

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 142 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 3.22 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 61.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில 2ம் கட்ட தேர்தலில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 89.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
முன்னதாக, கடந்த 23-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவீதம் என்ற சாதனை அளவிலான வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.