

மேற்கு வங்கத்தில் 8ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பயங்கரம் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் சிட்டி சென்டர் பகுதியில், 14 வயது சிறுமி 8ஆம் வகுப்பு படித்து வந்தார்
கடந்த சனிக்கிழமை மதியம் 1:30 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான சிம்ரன் தமாங் என்ற பெண், சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி வெளியே அழைத்து வந்துள்ளார்.
காரிலேயே சிறுமிக்குத் தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து மற்றும் மதுவைக் கலந்து கொடுத்துள்ளனர்.
சிறுமி சுயநினைவை இழந்ததும், கவிகுரு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கொண்டு சென்று சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமியை சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் சாலையோரம் வீசிவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியுள்ளது.
பின்னர், அங்கு வந்த சில நபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றியுள்ளனர்.
சாலையில் கிடந்த சிறுமியை அந்த வழியாக வந்த இ ரிக்ஷா ஓட்டுநர் அவரது வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்துள்ளார்.
சிறுமியின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட ஹோட்டலையும் ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனர்.
இதுவரை இந்த வழக்கில் சிறுமியை அழைத்துச் சென்ற பெண் சிம்ரன் தமாங், வன்கொடுமையில் ஈடுபட்ட ராஜ் மல்லிக், ஷேக் அஜருதீன் என்ற இரு குற்றாவளிகள் மற்றும் விதிமுறைகளை மீறி அறை வழங்கிய ஹோட்டல் மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.