125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.8500 கோடி நிதி ஒதுக்கீடு: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தகவல்

பயன்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடைய வேண்டும், போலி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அல்ல என்று மேற்குவங்க முதல்வர் சுவேந்து கூறினார்.
VP G-Ram Ji Scheme
Published on

விபி-ஜி ராம் ஜி திட்டம்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட விபி-ஜி ராம் ஜி திட்டம் 2026 ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வர உள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.

விபி ஜி-ராம் ஜி திட்டத்திற்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு:

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி இன்று கூறுகையில், “விபி ஜி-ராம் ஜி திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.8,500 கோடியை ஒதுக்கியுள்ளது.

கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2,400 கோடி மதிப்பிலான ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மத்திய அரசால் ரூ.1,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

பயன்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடைய வேண்டும், போலி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அல்ல” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டவிரோத குடியேறிகளுக்கு நலத்திட்டங்கள் சென்றடையக் கூடாது என்று தெரிவித்தார்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பாத குடும்பங்களுக்கோ அல்லது 'வந்தே மாதரம்' பாடப்படாத கல்வி நிறுவனங்களுக்கோ நலத்திட்ட உதவிகளை நீட்டிப்பது குறித்தும் மேற்குவங்க முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

முந்தைய ஆட்சியின் கீழ் பயனாளிகள் தரவுத்தளங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டிய அவர், நலத்திட்டங்களின் உண்மையான பயனாளிகளை அடையாளம் காண அரசு விரும்புவதாகவும் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com