

வியட்நாம் அதிபர் டோ லாம் மூன்று நாள் அரசுமுறை பயணமாக வரும் 5-ம் தேதி இந்தியா வருகிறார்.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு டோ லாம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். அவருடன் வியட்நாம் அரசாங்கத்தின் மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளடக்கிய ஒரு உயர்மட்டக் குழுவும் இந்தியா வருகிறது.
வியட்நாம் அதிபர் டோ லாம், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் டோ லாம் இருவரும் விவாதிப்பார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.