கேரளாவில் வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்படாது: காங்கிரஸ் எம்.பி. உன்னிதன்

கேரளாவில் இந்த வாழ்நாளில் வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்படாது என்று காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. உன்னிதன்
காங்கிரஸ் எம்.பி. உன்னிதன்
Published on

தேசியப் பாடலான வந்தே மாதரம் முழுமையாகப் பாடுவது குறித்து தலைமைச் செயலாளர் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தாரா என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய உன்னிதன், "நரேந்திர மோடி எங்களைச் சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும்" முழுமையாகப் பாடப்படாது என்று கூறினார். இதுவரை பாடப்பட்டு வந்த முறையிலேயே அது பாடப்படும். அதற்கு மேல் எதுவும் பாடப்படாது என்று அவர் உறுதியாகக் கூறினார்.

லோக் பவன்கள் தரங்கெட்ட அரசியலின் மையங்களாக மாறிவிட்டது

மேலும், லோக் பவன்கள் (கவர்னர் மாளிகை) தரங்கெட்ட அரசியலின் மையங்களாக மாறிவிட்டதாகவும், ஆளுநர்கள் இப்போது பண பலத்தைக் கொண்டு ஜனநாயகத்தைச் சீர்குலைக்க செயல்படுகிறது. அப்படியிருக்க, ஆளுநர்களிடமிருந்து நாம் என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் அனைவரும் மத்திய அரசின் அடிவருடிகளாக மாறிவிட்டனர். வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வாழ்நாளில் அது நடக்காது. என்றார்.

2022-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை போற்றும் வகையில் ஆசாதி கா அமரித் மஹோத்சவ் என்ற பிரசாரம் தொடங்கப்பட்டது. இந்த பிரசாத்தின்நோக்கம், ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதுதான். தேசியக்கொடி ஏற்றி அதன் வீடியோவை பதவிடலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 வருடம்

இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 வருடம் ஆகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் கொடி ஏற்றுவதுடன் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கேரள மாநில தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இதன் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தேசியப் பாடலை முழுமையாகப் பாடுமாறு உத்தரவிட்டு வெளியிடப்பட்ட இந்தக் கடிதத்தை எதிர்க்கட்சியான சிபிஐ (எம்) விமர்சித்துள்ளதுடன், அதைத் திரும்பப் பெறுமாறும் கோரியுள்ளது. அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் மூலம் மாநில அரசு ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து வருவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com