மக்களவையிலும் வந்தே மாதர மசோதா நிறைவேற்றம்!

இரு அவைகளிலும் நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரும்பட்சத்தில் சட்டமாக நிறைவேறும்.
மக்களவையிலும் வந்தே மாதர மசோதா நிறைவேற்றம்!
Published on

'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026' நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மக்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரும்பட்சத்தில் சட்டமாக நிறைவேறும்.

தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து

1971-ஆம் ஆண்டின் தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ், தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு உள்ள அதே சட்டப் பாதுகாப்பு மற்றும் அந்தஸ்து இனி 'வந்தே மாதரம்' பாடலுக்கும் வழங்கப்படும்.

3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வந்தே மாதரம் பாடல் பாடுவதை வேண்டுமென்றே தடுப்பது, இடையூறு விளைவிப்பது அல்லது அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

எதிர்ப்பு

மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். குறிப்பாக திமுக இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com