வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும்-வி.சோமண்ணா

ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது.டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம்.
வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும்-வி.சோமண்ணா
Published on

பெங்களூரு:

மத்திய ரெயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரி வி.சோமண்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வந்தே பாரத் ரெயிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசித்தோம். ரெயில்வே துறையில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவின் அனுபவம் எனக்கு ஊக்கமளிக்கிறது.

ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது. நாட்டில் ராணுவம் முதலிடத்திலும், ரெயில்வே துறை 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கேற்ப 2 துறைகளின் செயல்பாடுகளும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com