உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட தாமாகவே முன்வந்த கேரள வாலிபர்

மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.
ரஞ்சித்.
ரஞ்சித்.
Published on

திருவனந்தபுரம்:

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதை அமைக்கும்பணியில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தாமாகவே முன்வந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

தேசிய பேரிடர் மீட்பு படையில் உறுப்பினராக உள்ள இவர், பல்வேறு இயற்கை பேரழிவு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். முக்கியமாக 2013-ல் உத்தரகாண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு, 2018-ல் ஏற்பட்ட வெள்ள பேரழிவு, 2019-ல் காவலபாரா மற்றும் 2020-ல் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவு, உத்தரகாண்ட் தபோவன் சுரங்கப்பாதை பேரழிவு போன்ற இயற்கை பேரிடர்களில் ரஞ்சித் பங்கேற்றிருக்கிறார்.

இதனால் தற்போது உத்தரகாண்ட் உத்திர காசியில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட தானாகவே முன்வந்திருக்கிறார். ரஞ்சித் இந்த துறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com