சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 12 பக்தர்கள் உயிரிழப்பு

அல்க்நந்தா ஆற்றில் டெம்போ வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பக்தர்கள் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 12 பக்தர்கள் உயிரிழப்பு
Published on

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சுற்றுலா வேனில் பத்ரிநாத் கோவிலுக்கு 17 பேர் சென்றனர்.

அல்க்நந்தா ஆற்று பகுதியில் சுற்றுலா வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் பக்தர்கள் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com