என் மலர்
இந்தியா

கள்ளக்காதலை கண்டித்ததால் முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்து 6 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி
- மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மாயா தேவி.
சம்பவத்தன்று தேவேந்திர குமார் திடீரென மாயமானார். போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி ஹரித் கிராமத்தில் ஒரு பிளாஸ்டிக் பையில் மனித கைகளும், கால்களும் கிடந்தன. தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு அருகில் உள்ள கிணற்றில் மனித உடல் கண்டு எடுக்கப்பட்டது.
ஆனால் கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைக்கவில்லை. இதற்கிடையே கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது தேவேந்திர குமார் என்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவரது மனைவி மாயாதேவியை போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் மாயாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த அனில்யாதவ் என்பவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இவர்களது கள்ளக்காதலை அறிந்த தேவேந்திர குமார் மனைவியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கை, கால், தலை என உடல் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டி நள்ளிரவில் எடுத்து சென்று வெவ்வேறு பகுதிகளில் வீசி எறிந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாயாதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அனில் யாதவ், அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






