என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர்: ராஜ்நாத் சிங் வரவேற்பு
- இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
- இதில் பங்கேற்க அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் இன்று டெல்லி வந்தடைந்தார்.
புதுடெல்லி:
இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்
இதில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் இன்று மாலை டெல்லி வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சென்று அவரை வரவேற்றார்.