பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா

பதவிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இன்னமும் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா
Published on

பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஎஸ்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளார். ஆனால் இன்னமும் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் சோனி அதன்பின் கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி ஆணைய தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

பயிற்சி ஐ.ஏ .எஸ். பூஜா கேட்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும், போலி சான்றிதழ் விவகாரத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com