புற்றுநோயால் இறந்த நண்பரின் இறுதிச்சடங்கில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்

ஆனந்த் திடீரென, எரிந்துக் கொண்டிருந்த சிதை மீது விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.பலத்த காயமடைந்த ஆனந்த் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
புற்றுநோயால் இறந்த நண்பரின் இறுதிச்சடங்கில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்
Published on

உத்தரப் பிரதசேம் மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள நாக்லா கங்கர் காவல் நிலையப் பகுதியை சேர்ந்தவர் அசோக் (42). புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அசோக் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், அசோக்கின் இறுதிச் சடங்குகள் நேற்று காலை 11 மணியளவில் யமுனைக் கரையில் நடைபெற்றன. இறுதியாக, அசோக்கின் சிதைக்கு தீ மூட்டிவிட்டு அங்கிருந்தவர்கள் சிறுது நேரத்தில் வெளியேறத் தொடங்கினர்.

அப்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த அசோக்கின் நெருங்கிய நண்பரான ஆனந்த் திடீரென, எரிந்துக் கொண்டிருந்த சிதை மீது விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பலத்த காயமடைந்த ஆனந்தை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்னர்.

அங்கு ஆனந்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லும்படி கூறினர். ஆனால் ஆனந்த் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com