மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு திடீர் ராஜினாமா!

ராஜினாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
மத்திய ரயில்வே இணையமைச்சர் வ்னீத் சிங் பிட்டு திடீர் ராஜினாமா!
Published on

மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை இன்று (ஜூலை.24) திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்திய அரசியலமைப்பின் 75வது பிரிவின் (2) உட்பிரிவின் கீழ், பிரதமரின் ஆலோசனையின்படி, ரவ்னீத் சிங் ராஜினாமாவை இந்திய குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்,” என்று ராஷ்டிரபதி பவன் செய்திக்குறிப்பு தெரிவித்தது.

பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் பீன்ட் சிங்கின் பேரனான இவர், 2024-ல் பாஜகவில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் 21 ஆம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு நபர் அதிகபட்சமாக 6 மாதங்கள் மட்டுமே அமைச்சராக நீடிக்க முடியும் என்ற விதி இருந்தாலும், அவர் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக தற்போது ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில் தற்போதைய தேர்தலில் இவருக்கு மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com