மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் உள்ளிட்ட கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே. சிவகுமார் ஆலோசனை

பெங்களூருவில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சந்திப்பு நடைபெறவுள்ளது.
DK Shivakumar and Pralhad Joshi Talks about Mekedatu Dam
Published on

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

மேகதாது அணை விவகாரம்:

கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு, அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடாமல் இருந்து வருகிறது. கர்நாடகவில் போதுமான மழை பெய்யாமல் வறட்சி நிலவி வருவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து பெங்களூருவில் டி.கே. சிவக்குமாரை தமிழக முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ள கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

டெல்லியில் ஆலோசனை கூட்டம்:

இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வர், அமைச்சர்கள் ஜார்ஜ், ஈஸ்வர் காந்த்ரே, சரண் பிரகாஷ், கிருஷ்ண பைரே கவுடாம், சதீஷ் ஜார்கிஹோலி, ராம லிங்கரெட்டி ஆகியோர்களும் பங்கேற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இவர்களுடன் கர்நாடகவை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com