பிஎம் கிசான் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக ரூ.3.15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Published on

பிஎம் கிசான் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி இத்திட்டம் 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.3,15,614 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திட்டத்திற்கு தகுதிவாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு மாதம் ரூ. 6000 நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படும்.

2019 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், இதுவரை 23 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்றடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

இத்திட்டத்தின் பயனாளிகளில் நான்கில் ஒருவர் பெண் என்றும், கடைசி தவணையில் மட்டும் 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்ததுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com