

மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவில். அப்பகுதியில் மிகவம் பிரபலமான இந்த கோவிலில் ரீல்ஸ் எடுப்பதை தடுத்த காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவத்தன்று மகாகாலேஸ்வரர் கோவிலில் தடை செய்யப்ட்ட பகுதியில் பெண்கள் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். இதனை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமைடந்த பெண்கள் இருவரும் அங்கிருந்த வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பாலக் மற்றும் பாரி என இரு பெண்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பெண் காவலர்கள் காயமுற்றனர். கோவிலில் பெண் காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மஹாகல் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.