UGC NET 2026 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஜூன் 22 முதல் 30 வரை நடைபெறும் தேர்வுகளுக்கான அனுமதி அட்டையை ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
UGC NET.jpg
Published on

தேசிய தேர்வு முகமை, யுஜிசி நெட் 2026 தேர்வுக்கான அனுமதி அட்டைகளை இன்று வெளியிட்டுள்ளது.

இத்தேர்வு ஜூன் 22, 23, 24, 25, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தேர்வர்கள் தங்களின் உள்நுழைவு விவரங்களை வைத்து, ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து தங்களது அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

முன்னதாக நகரத் தகவல் சீட்டு மூலம், தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு நகரம் மற்றும் தேதியை ஜூன் 10 அன்று தெரிவித்திருந்தது.

தற்போது தேர்வு நடைபெறும் இடம் மற்றும் பிற அத்தியாவசிய விவரங்கள் குறித்த முழுமையான தகவல்களை அனுமதி அட்டை வழங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com