திரிபுரா முதல் மந்திரி திடீர் ராஜினாமா

தலைநகர் டெல்லி சென்ற பிப்லப் குமார் தேவ் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.
பிப்லப் குமார் தேவ்
பிப்லப் குமார் தேவ்
Published on

அகர்தலா:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது.

பிப்லப் குமார் தேவ் நேற்று தலைநகர் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், திரிபுரா முதல் மந்திரி பதவியை பிப்லப் குமார் தேவ் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

அவரது ராஜினாமாவை தொடர்ந்து மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com