ஐதராபாத்தில் போக்குவரத்தை சீரமைக்க திருநங்கை படை

போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.தனித்தனியாக சீருடைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
ஐதராபாத்தில் போக்குவரத்தை சீரமைக்க திருநங்கை படை
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலத்தில் திருநங்கைகள் பல்வேறு பணிகளில் பணியாமத்தப்படுவார்கள் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்க ப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இதற்காக தனி தனியாக சீருடைகளும் வடிவமைக்க பட்டு வருகின்றன. திருநங்கை படையில் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

திருநங்கை படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

அதற்கு பிறகு ஐதராபாத் மாநகர பகுதியில் திருநங்கை படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com