1,250 ரூபாய்காக நடந்த விபரீதம் .. சம்பளம் தராத முதலாளியை குத்திக் கொன்ற தொழிலாளி

சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1,250 ரூபாய்காக நடந்த விபரீதம் .. சம்பளம் தராத முதலாளியை குத்திக் கொன்ற தொழிலாளி
Published on

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் வேலை செய்ததற்கான சம்பளத்தைத் தர மறுத்த முதலாளியை தொழிலாளி ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பை நகரின் கலம்போலி பகுதியில் பர்வேஸ் அன்சாரி என்பவரிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் நேற்று முன் தினம் [ஜூன் 14] வெள்ளிக்கிழமையன்று தனது சம்பளமாக 1,250 ரூபாயை தரும்படி அன்சாரியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் சம்பளத்தை ஜூன் 20 ஆம் தேதி தருவதாக கூறி அன்சாரி தட்டிக்கழித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி அன்சாரியை குத்திக் கொலை செய்துள்ளார். மேலும் அருகில் நின்றிருந்த அன்சாரியின் நண்பரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளியான தொழிலாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 1,250 ரூபாய்காக நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com