

சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. மம்தா பானர்ஜிக்கு எதிராக ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 61 எம்.எல்.ஏ.க்கள் மேற்குவங்க சட்டசபையில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் ரிதப்ரதா பானர்ஜி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார்.
மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய சுகேந்து சேகர் ராய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார்.
திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சுஷ்மிதா தேவ் விலகியுள்ளார்.
இந்நிலையில். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்.பி. விலகி உள்ளார். இதன்படி பிரகாஷ் சிக் பரெக் தனது
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணனிடம் அளித்துள்ள கடிதத்தில், நான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ந்து எம்.பி.க்கள் விலகி வருவவது மம்தா பானர்ஜிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.