திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி தலை முடியை மழித்து செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய மக்கள்

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு இருந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி தலை முடியை மழித்து செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய மக்கள்
Published on

மேற்கு வங்கம், ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஷ்யாம்பூரை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சன்யாசி மன்னா.

இவர் அப்பகுதியில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு இருந்தது.

பல மாதங்களாக இத்திதிட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஊதியத்தை போலி வருகைப் பதிவேடு தயாரித்து இவர் முறைகேடு செய்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

ஒரு கட்டத்தில் அவரை சிறைபிடித்து மக்கள் அவரது தலை முடியை மழித்து, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து, இடுப்பில் கயிறு கட்டியும் அவரைக் கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

தகவல் கிடைத்ததும், ஷ்யாம்பூர் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களவை சமாதானப்படுத்தி அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com