இங்கயுமா?.. பவர் கட் ஆனதால் பாதியில் நின்ற மெட்ரோ ரெயில்..

நியூ காரியாவில் இருந்து கிளம்பி தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்தது மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.
இங்கயுமா?.. பவர் கட் ஆனதால் பாதியில் நின்ற மெட்ரோ ரெயில்..
Published on

இந்தியாவின் பெரு நகரங்களின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம்  நகரங்கள் மற்றும் ஊர்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவது என்பது மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் பவர் கட்- ஆல் மெட்ரோ ரெயிலே நின்றுள்ள சம்பவம் கல்கத்தாவில் நடந்துள்ளது.

மேற்கு வங்காள தலைநகர் கல்கத்தாவில் நியூ காரியாவில் இருந்து கிளம்பி  தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரெயிலானது 10.38 மணியளவில் மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.

பணியாளர்களின் துரிதமான நடவடிக்கையால் சுமார் 14 நிமிடங்கள் கழிந்து மீண்டும் கரண்ட் வந்த நிலையில் 10.52 மணிக்கு மீண்டும் ரெயில் பயணத்தை தொடர்ந்தது. கரண்ட் கட்- ஆல் மெட்ரோ ரெயில் நிற்பது என்பது வழக்கத்துக்கு மாறானதாக பார்க்கப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com