வீடு புகுந்து இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு- முகமூடி அணிந்த நபர் வெறிச்செயல்

இளம் பெண் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் வலியால் அலறி துடித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு- முகமூடி அணிந்த நபர் வெறிச்செயல்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம், சிர்காபூர், வாசரை சேர்ந்தவர் இளம் பெண். நேற்று காலை இவரது பெற்றோர் விவசாய வேலைக்கு சென்றனர்.

இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து பைக்கில் வந்தார்.

பைக்கை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு இளம் பெண் வீட்டிற்குள் நுழைந்தார். தனியாக இருந்த இளம் பெண்ணை சரமாரியாக தாக்கினார். பின்னர் தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து இளம் பெண் மீது ஊற்றிவிட்டு தீ வைத்தார். இளம் பெண் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் வலியால் அலறி துடித்தார்.

அப்போது முகமூடி அணிந்து வந்த நபர் இளம் பெண்ணின் வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழிட்டு விட்டு பைக்கில் தப்பி சென்றார்.

இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் இளம்பெண்ணின் முகம், உடல் முழுவதும் கருகியது. அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மர்ம நபர் யார்? எதற்காக தீ வைத்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com