

இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, இந்தியாவில் முதல்முறையாக மக்கும் தன்மை கொண்ட பால் பாக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.
இயற்கையாகவே மக்கும் தன்மை கொண்ட இந்த பாக்கெட்டுகள் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நாளைமுதல் (ஜூன்.5) டெல்லியில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்கு பின்னர் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு நுகர்வோரிடம் இருந்து எந்த கூடுதல் தொகையும் வசூலிக்கப்படாது எனவும் மதர் டெய்ரி மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் மீனேஷ் ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமான மதர் டெய்ரி, டெல்லியில் நீண்டநாட்களாக பால் விநியோகம் செய்கிறது. மேலும் நெய், பனீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.