ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை: மத்திய அரசு

மோசடி கும்பல்களால் டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதால் நீட் மறுதேர்வு நடைபெறும் வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Telegram Ban for NEET Security
Published on

நீட்-யுஜி மறுதேர்வுக்கு முன்னதாக, தேர்வு மோசடி மற்றும் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் டெலிகிராம் செயலியை மத்திய அரசு முடக்கியுள்ளது.

மேலும் ஜூன் 22 வரை நாடு முழுவதும் டெலிகிராம் தளத்திற்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் செய்தித் திருத்தும் அம்சங்களையும் செயலிழக்கச் செய்து, தற்காலிகமாக அதன் அணுகலைஅரசாங்கம் கட்டுப்படுத்தியது.

மேலும் ஜூன் 22-ஆம் தேதிக்குப் பிறகு அணுகலை மீண்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் டெலிகிராம் செயலியில் கசிந்தால் மத்திய அரசு இத்தடையை தற்போது அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com