கேரளாவில் போக்சோ புகார் கூறிய சிறுமியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலை செய்த தொழிலாளி

சிறுமி பலத்த காயம் அடைந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் போக்சோ புகார் கூறிய சிறுமியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலை செய்த தொழிலாளி
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டு குளம் அருகே உள்ள எலஞ்சியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவரது மாமா முறை உறவினரான 63 வயது மதிக்கத்தக்கவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் புகார் கூறிய சிறுமி, தனது வீட்டின் பின்புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு புகார் கூறப்பட்ட ரப்பர் தோட்ட தொழிலாளியான அவரது உறவினர் வந்துள்ளார்.

அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை கத்தியால் குத்தினார். இதில் சிறுமி பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனை கண்டதும் தொழிலாளி அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட தொழிலாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டவர், அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com