ராஜஸ்தானுக்கு வேலை தேடி சென்ற பெண்ணை ஓட்டலில் அடைத்து பாலியல் தொல்லை

டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு வேலை தேடி சென்ற பெண்ணை ஓட்டலில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Published on

ஜெய்பூர்:

டெல்லியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். அவருக்கு ராஜஸ்தான் மாநிலம் சிரு பகுதியில் ஒரு கம்பெனியில் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது.

இதற்காக அவர் ரெயில் மூலம் டெல்லியில் இருந்து சிருவுக்கு சென்றார். அங்கு அவர் எங்கு செல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 வாலிபர்கள் அவருக்கு நேர்முக தேர்வுக்கு செல்ல உதவுவதாக கூறினார்கள். இதை நம்பி அந்த பெண் அவர்களுடன் சென்றார். 4 வாலிபர்களும் இளம்பெண்ணை ரெயில் நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அந்த கும்பல் வலுக்கட்டாயமாக இளம்பெண்ணை லாட்ஜ் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்து இளம்பெண் தப்பிக்க முயன்றும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

பின்னர் கற்பழிப்பு கும்பல் அந்த பெண்ணின் கை, கால்களை கட்டினார்கள். இதையடுத்து முதல் தளத்தில் இருந்து லாட்ஜ் அறை ஜன்னல் வழியாக அந்த பெண்ணை 4 பேரும் தூக்கி வெளியே வீசினார்கள்.

இதில் கீழே விழுந்த அந்த பெண் படுகாயம் அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தேவேந்திரசிங், விக்ரம்சிங் மற்றும் பாலாஜிசிங், சுனில்ராஜ்புஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com