தெலுங்கானா: விமான விபத்தில் தமிழக பயிற்சி விமானி உள்பட 2 பேர் பலி

ஹைதராபாத் தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
விபத்து
விபத்து
Published on

ஹைதராபாத்:

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது. இதில் பயிற்சியாளர் உள்பட 2 விமானிகள் உயிரிழந்தனர்

இந்த விமானம் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மச்செர்லாவில் இருந்து புறப்பட்டது. கிருஷ்ணா நதியின் நாகார்ஜுன்சாகர் அணைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பலத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர், ஹெலிகாப்டர் சிதைந்த நிலையில் கிடந்ததுள்ளது. 

இந்த விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மகிமா என்ற பயிற்சி விமானி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் மற்றும் மருத்துவக் குழு சம்பவ இடம் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com