பேஸ்புக் மூலம் பழகி உல்லாசம்: வாலிபரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த பெண் கைது

திருச்சூர் அருகே பேஸ்புக் மூலம் பழகி வாலிபரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேஸ்புக்
பேஸ்புக்
Published on

கொழிஞ்சாம்பாறை:

திருச்சூர் மாவட்டம் சேலைக்கரை அருகே உள்ள ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் சிந்து (வயது 37). இவர் பாலக்காடு நகர் கல் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் (34) என்பவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். கடந்த மாதம் சிந்து, ராஜீவை தொடர்பு கொண்டு தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். வீட்டில் தனியாக இருந்த சிந்துவும், ராஜீவும் உல்லாசமாக இருந்தனர்.

இந்த காட்சிகளை சிந்து, தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அந்த காட்சிகளை வெளியே பரப்பாமல் இருக்க பணம் கொடு என மிரட்டினார். அந்தசமயம் ராஜீவ் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியையும், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் அவரிடம் இருந்து பறித்தார்.

பின்னர் சில நாட்கள் கழித்து ராஜீவை மீண்டும் தொடர்பு கொண்ட சிந்து, உன்னிடம் பறித்த நகையை தந்து விடுகிறேன், வீட்டுக்கு வா என அழைத்தார். வீட்டுக்கு சென்ற ராஜீவை மிரட்டி மீண்டும் ரூ.10 ஆயிரம் பறித்துக் கொண்டு அனுப்பினார்.

அதன்பின்னரும் ராஜீவை விடாமல் துரத்திய சிந்து மீண்டும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜீவ் திருச்சூர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்துவை கைது செய்தனர். ராஜீவ்விடம் அவர் பறித்த நகையையும் போலீசார் மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com