கணவர் உடலை அடக்கம் செய்தவுடன் மனைவி தற்கொலை

கணவரின் இறுதி சடங்கு முடிந்தவுடன் சாஹிதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.போலீசார் சாஹிதி உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
கணவர் உடலை அடக்கம் செய்தவுடன் மனைவி தற்கொலை
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், வனஸ்தலிபுரத்தை சேர்ந்தவர் மனோஜ் (வயது 31). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி சாஹிதி (29). கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனோஜ் தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.

கடந்த 2-ந் தேதி சாஹிதி தனது பெற்றோரை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மனோஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

அவருடன் வேலை செய்யும் நண்பர்கள் மனோஜை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கணவர் இறந்த செய்தியை அவரது மனைவிக்கு தெரிவித்தனர்.

இதனை கேட்ட சாஹிதி கதறி துடித்தார். இதையடுத்து மனோஜின் உடல் கடந்த 23-ந் தேதி அமெரிக்காவிலிருந்து வனஸ்தலிபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கணவரின் இறுதி சடங்கு முடிந்தவுடன் சாஹிதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.

இதனைக் கண்ட அவரது பெற்றோர் சாஹிதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சாஹிதி உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com