உத்தரகாண்ட் மாநில தூதுவராக ரிஷப் பண்ட் நியமனம்

இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியாவை பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தூதுவராக உத்தரகாண்ட் அரசு ஏற்கனவே நியமித்துள்ளது.
ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்
Published on

டேராடூன்:

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமாக இருந்து வருபவர் ரிஷப் பண்ட். 

இந்நிலையில், மாநில தூதுவராக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட், இளைஞர்களிடையே விளையாட்டையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com