லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்- உ.பி.அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதன் பிறகு நடந்த வன்முறை சம்பவங்களில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூ‌ஷண் ஏற்கனவே ஆஜராகி முக்கிய சாட்சியங்கள் மிரட்டல்களுக்கு ஆளாகிறார்கள். உத்தரபிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளதால் சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என தெரிவித்தார்.

இதனை பரீசீலித்த நீதிபதிகள், மேல் முறையீடு மனு தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா மற்றும் உத்தரபிரதேச அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் சாட்சியங்களை சுப்ரீம் கோர்ட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளை உத்தர பிரதேச அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com