கேரளாவில் 15 வயது சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம்- சிறுவன் உள்பட 2 பேர் கைது

மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளாவின் இடுக்கிக்கு வந்த 15 வயது சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Published on

திருவனந்தபுரம்:

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் இடுக்கியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு வந்தனர்.

இந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று அந்த பகுதியை சேர்ந்த நண்பருடன் அருகில் உள்ள சந்தன பாறைக்கு சென்றார்.

பூம்பாறை பகுதியில் இருவரும் சென்ற போது அங்கு வாலிபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் சிறுமியையும், அவரது நண்பரையும் வழிமறித்தனர்.சிறுமியின் நண்பரை தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

பின்னர் சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு தூக்கி சென்றனர்.அங்கு சிறுமியை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதற்கிடையே சிறுமியின் நண்பர் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று உதவி கோரினார். அவர்கள் விரைந்து வந்ததும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் தப்பியோடிவிட்டனர்.

இது பற்றி சிறுமியின் குடும்பத்தினர், போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சிறுமியை பலாத்காரம் செய்ததாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com