என் மலர்

  இந்தியா

  கிணற்றில் குதித்து 5 வயது மகளுடன் தற்கொலை செய்த ஆசிரியை
  X

  கிணற்றில் குதித்து 5 வயது மகளுடன் தற்கொலை செய்த ஆசிரியை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிணற்றில் குதித்து மகளுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காசர்கோடு பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • தகவல் அறிந்த மேல்பரம்பா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டனர்.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கல்நாடு அரமங்காணம் பகுதியைச் சேர்ந்தவர் தாஜுதீன். இவரது மனைவி ரூபினா (வயது 30). இவர்களது மகள் நயனா மரியம் (5). இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

  சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூபினா மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் திடீரென மாயமாகினர். இதையடுத்து அவர்களது உறவினர்கள் இருவரையும் தேடினார்கள். அப்போது அவர்களது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தாய், மகள் ஆகிய இருவரும் பிணமாக கிடந்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பரம்பா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டனர். ரூபினா தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  ரூபினா அந்த பகுதியில் உள்ள விளையாட்டு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்திருக்கிறார். அவருக்கு குடும்பத்தில் நிதி நெருக்கடி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக ரூபினா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

  இந்நிலையில் அவர் தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். அவர் தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது மகனை கவனித்துக் கொள்ளுமாறு குடும்பத்தினரை கேட்டு கொண்டுள்ளார்.

  கிணற்றில் குதித்து மகளுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காசர்கோடு பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×