பெண் அரசியல்வாதி குறித்து பேச்சு: சர்ச்சை சாமியார் ஜாமீனில் விடுதலை

ஹரித்துவார் கோர்ட்டில் நடந்த பெண் அரசியல் வாதிகள் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஹரித்துவார்:

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இந்து சாமியார்கள் கூட்டம் நடந்தது. இதில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக நரசிங்க ஆனந்த் உள்பட சில சாமியார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் பெண் அரசியல்வாதிகள் குறித்து சர்ச்சை கருத்துகள் கூறியதாக நரசிங்க ஆனந்த் மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதில் கடந்த 7-ந் தேதி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஹரித்துவார் கோர்ட்டில் நடந்த பெண் அரசியல் வாதிகள் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இரண்டு வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததால் சாமியார் நரசிங்க ஆனந்த் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com