திருவனந்தபுரத்தில் நடிகை ஷோபனா போட்டியிட வேண்டும்- நடிகர் சுரேஷ்கோபி விருப்பம்

நடிகை ஷோபனா வருங்கால அரசியல்வாதி. மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமையும், நானும் இது தொடர்பாக அவருடன் பேசினோம்.
திருவனந்தபுரத்தில் நடிகை ஷோபனா போட்டியிட வேண்டும்- நடிகர் சுரேஷ்கோபி விருப்பம்
Published on

திருவனந்தபுரம்:

பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகை ஷோபனா, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நடிகை ஷோபனா போட்டியிடவேண்டும் என்று நடிகர் சுரேஷ்கோபி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

நடிகை ஷோபனா வருங்கால அரசியல்வாதி. மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும். அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்பதே எனது விருப்பம். பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமையும், நானும் இது தொடர்பாக அவருடன் பேசினோம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com