இமாச்சலபிரதேச தலைவர்களுடன் சோனியா இன்று ஆலோசனை

தேர்தல் தோல்வி தொடர்பாக 5 மாநில தலைவர்களை பதவி விலக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார்.
சோனியா காந்தி
சோனியா காந்தி
Published on

புதுடெல்லி:

5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸ் தலைமையை மீண்டும் விமர்சனம் செய்தனர்.

தேர்தல் தோல்வி தொடர்பாக 5 மாநில தலைவர்களை பதவி விலக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலகினார்கள்.

இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இமாச்சலபிரதேச மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக அம்மாநிலத்தை சேர்ந்த 12 காங்கிரஸ் சீனியர் தலைவர்களுக்கு மேலிடம் சம்மன் அனுப்பி உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்களிடம் சோனியா ஆலோசனை நடத்துகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com