தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.10 சதவீதமாக குறைப்பு

2020-21ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
Published on

2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 1977-78-ம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் இம்முறை குறைந்துள்ளது.

ஏற்கனவே, 2020-21ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதத்தில் 2020-21ம் ஆண்டிற்கான வட்டி வருமானத்தை 8.5 சதவீதத்தில் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்க கள அலுவலகங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மத்திய அறங்காவலர் வாரியத்தின் முடிவுக்குப் பிறகு, 2021-22க்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் ஒப்புதல் பெற நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது. நிதி அமைச்சகம் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே வைப்பு நிதி வட்டி விகிதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com