முன்னாள் முதல் மந்திரி உள்பட 184 வி.ஐ.பி.க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் போலீஸ்

பஞ்சாப்பில் கடந்த மாதம் 12-ம் தேதி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என 122 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
முதல் மந்திரி பகவந்த் மான்
முதல் மந்திரி பகவந்த் மான்
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப்பில் முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தனிநபர் என 184 பேருக்கு வழங்கிய வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அம்மாநில போலீசார் நீக்கியுள்ளனர்.

இதில், முன்னாள் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் மத்திய மந்திரி சுக்ஜிந்தர் சிங் ரந்தவாவின் மகன் உதய்பீர் சிங், முன்னாள் கேபினட் மந்திரிகள் சுர்ஜித் சிங் ராக்ரா மற்றும் பிபி ஜாகிர் கவுர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வரீந்தர் சிங் பஜ்வா, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. தீப் மல்கோத்ரா, 

பா.ஜ.க. மாநில துணை தலைவர் ராஜேஷ் பாகா, மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஹரீந்தர் சிங் கோலி உள்பட 184 பேரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய அச்சுறுத்தலை ஆய்வு செய்து பாதுகாப்பு பற்றி மேற்கொண்ட மறுஆய்வு அடிப்படையில் இந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதற்கு தொடர்புடைய அரசு நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என பாதுகாப்பிற்கான கூடுதல் டி.ஜி.பி. தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com