பஞ்சாப் சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி, சித்து போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

பஞ்சாப் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
முதல் மந்திரி சரண் ஜித் சன்னி
முதல் மந்திரி சரண் ஜித் சன்னி
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிட தேர்தல் வேலைகளைத் துரிதப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த 86 வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் முதல் மந்திரி சரண் ஜித் சன்னி சம்குர் சாகிப் தொகுதியிலும், மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com