கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் நாளை பதவி ஏற்பு- பிரதமர் மோடி பங்கேற்பு

கோவா மாநில முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பிரமோத் சாவந்த்
பிரமோத் சாவந்த்
Published on

கோவா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்லில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து கோவா மாநில முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக பதவி ஏற்கிறார். இதற்கான பதவி ஏற்பு விழா நாளை காலை 11 மணிக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...கோயில்களுக்கு அருகே இந்து அல்லாத வணிகர்கள் வியாபாரம் செய்ய எதிர்ப்பு- கர்நாடகாவில் கிளம்பியது புதிய பிரச்சினை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com