பாலக்காடு அருகே வாளையார் மலையில் 4 நாட்களாக பற்றி எரியும் தீ

ஆளில்லா விமானங்கள் மூலமும் தீ பரவும் பகுதிகளை கண்காணித்து அதனை அணைக்க முயற்சி நடந்து வருவதாக கேரள வனத்துறையினர் தெரிவித்தனர்.
வாளையார் மலையில் பற்றி எரியும் தீ
வாளையார் மலையில் பற்றி எரியும் தீ
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வாளையார் பகுதியில் அடர்ந்த மரங்கள் நிறைந்த காடு உள்ளது.

இந்த காட்டு பகுதியில் கடந்த சனிக்கிழமை திடீரென தீப்பிடித்தது. வெயில் காலம் என்பதாலும், காற்று பலமாக வீசியதாலும் தீ மளமளவென அனைத்து பகுதிகளிலும் பரவியது.

இதுபற்றி மலை கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் காட்டுபகுதிக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதற்காக தீ அணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் நவீன உபகரணங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் காட்டில் உள்ள அரிய வகை மரங்கள் உள்பட மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகியது.

இதையடுத்து ஆளில்லா விமானங்கள் மூலமும் தீ பரவும் பகுதிகளை கண்காணித்து அதனை அணைக்க முயற்சி நடந்து வருவதாக கேரள வனத்துறையினர் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com