இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

நாச வேலையில் ஈடுபடுவதற்காக அவன் வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தக்க சமயத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றதால் நாசவேலை சதி முறியடிக்கப்பட்டது.
இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக்கொலை
Published on

புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் இன்று காலை 8 மணி அளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றான். இதனை பார்த்த பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றனர்.

அவன் யார்? எதற்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றான் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நாச வேலையில் ஈடுபடுவதற்காக அவன் வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தக்க சமயத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக்கொன்றதால் நாசவேலை சதி முறியடிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com