உக்ரைனில் இருந்து இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் - மத்திய அரசு

மீட்புப் பணிகளில் ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற தனியார் பயணிகள் விமானங்களும், விமானப்படை விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
நாடு திரும்பிய இந்தியர்கள்
நாடு திரும்பிய இந்தியர்கள்
Published on

புதுடெல்லி:

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவித்தனர்.

ஆபரே‌ஷன் கங்கா செயல் திட்டத்தின் கீழ் அவர்கள் பக்கத்து நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு, பயணிகள் விமானம், விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 75 பயணிகள் விமானங்கள் மூலம் 15,521 பேரும், 12 விமானப்படை விமானம் மூலம் 2467 பேரும் மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com